Breaking
Fri. Apr 26th, 2024

நிந்தவூர் கடற்கரைப் பிரதேசத்திற்கு பொழுதுபோக்கிற்காக வருகை தரும் பொதுமக்களைக் கவரும் வண்ணமும் அத்தகைய பொது மக்கள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கும் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக நிந்தவூர் கடற்கரைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காக வருகைதரும் பொது மக்களின் தொகை அதிகரித்துவருவதுடன்,

குறிப்பாக அயல் பிரதேசங்களைச் சேர்ந்தோர் குடும்பம், குடும்பமாகப் பெருமளவில் மாலை நேரங்களில் வருகை தரவும் தொடங்கியுள்ளனர்.

இதனையடுத்து நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தனது எண்ணக்கருவிற்கு அமைய வருகைதரும் பொது மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இதற்கமைய முதற்கட்டமாக நிந்தவூர் கடற்கரையை அண்டிய பகுதியில் பொது மக்கள் அமர்ந்திருந்து பொழுது போக்கவும், சுத்தமான காற்றை சுவாசிக்கவுமென ஆசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிலும் விசேடமாக நான்கு மையங்களில் ஆசன வசதிகள், மற்றும் மின்சார ஒளியுடன் கூடிய 4 மத்திய பொழுது போக்கு நிலையங்களும் அமைக்கப்பட்டு வருவது சிறப்பம்சமாகும்.

நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் தொடர்பு கொண்டு எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் பயனாக அவரது 75 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த ஆசன வசதி மற்றும் மத்திய பொழுது போக்கு நிலையங்களின் அமைப்புப் பணிகள் சிறப்புற முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Post