Breaking
Fri. Apr 26th, 2024

ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒருநாள் சேவை மற்றும் சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுகின்ற புதிய. பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கும் தேசிய வேலைத்திட்ட. நிகழ்வு பதிவாளர் நாயகம் திணைக்களம் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்தினால் இன்றைய தினம் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்ட நாள் இடம்பொயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார் இதன்போது தனது உரையில் ” வடக்கை பொருத்தவரையில் அதிகமான மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் சொத்துக்களை மற்றும் பூர்வீக நிலங்களையும் இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர் இவ்வாறு தங்கள் வாழ்கையில் பல துன்பங்களையும் அனுபவித்த மக்கள் இனி வரும் காலங்களில் நிம்மதியாகவும் கல்வி விளையாட்டு தொழில்வாய்ப்பு என முன்னேற வேண்டி இருக்கின்றது அந்த வகையில் இங்கு வாழ்கின்ற மக்களுக்கு கணிப் பிரச்சனை என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது அரசாங்கம் மற்றும் அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர மக்களை கஷ்டப்படுத்த அல்ல எனவே மக்கள் குறைகளை தேடிச்சென்று தீர்க்க வேண்டுய பொருப்பு உங்களையதும் எம்முடையது கடமையாகும் என தெரிவித்தார் மேலும் இந் நிகழ்வில் 5 பிரதேச செயலக செயலாளர்களும் இளைஞர் சேவைகள் மன்ற மாகாண இணைப்பாளர் முனவ்பர் வழக்கறிஞர்களும் இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Related Post