Breaking
Sat. Apr 27th, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அரசியல் ரீதியான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார்.

நான் சாகும் வரை மறக்க முடியாதவர்கள் என மகிந்த ராஜபக்ச மூவரை குறிப்பிட்டு கடும் தொணியில் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் , சமுக மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் பாரிய சிந்தனையும் தோற்றுவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , இவ்வரசின் இரண்டாம் நிலை அதிகாரமிக்கவர் என வர்ணிக்கப்படும் அமைச்சர் ராஜித மற்றும் அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஆகிய இம்மூவரையும் பகிரங்கமாக குறிப்பிட்டு இவர்களை சாகும் வரை மறக்க மாட்டேன் என்றும் வர்ணித்துள்ளார்.

மகிந்த குறிப்பிட்டுள்ள இம்மூவரில் ரிசாதையும் சுட்டிக் காட்டியிருப்பது முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தினரையும் நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் மிகப் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளதுடன். மறுபக்கம் முஸ்லிம் சமுகம் மார்பு தட்டி நிமிர்ந்து நின்று சந்தோசம் அடையவும் வழிவகுத்துள்ளது.

மகிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அட்டூளியங்களுக்கு எதிராக அப்போது இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் கொதித்தெழுந்து குரல் எழுப்பிய போதிலும் மகிந்த ஆட்சியை வீழ்த்துவதற்கு முஸ்லிம்கள் மத்தியில் முதல் முதலில் பிள்ளையார் சூழி போட்டவர் ரிசாத் பதியுதீன் என்பதை இந்த நாடே அறியும்.

அதன் பிற்பாடுதான் ரவூப் ஹக்கீம் உட்பட அனைத்து தரப்பினரும் மகிந்த ஆட்சியிலிருந்து விலகி வந்தனர்.

ரிசாத் பதியுதீன் அன்று மகிந்த ஆட்சியிலிருந்து வெளியேறாமல் விட்டிருந்தால் எனது ஆட்சி நீடித்திருக்கும் என அன்று மகிந்த கூறியிருந்த கருத்தின் மூலம் ரிசாத் பதியுதீன் முஸ்லிம் சமுகத்தின் பாதுகாவலனாக எந்தளவு தூரம் துணிச்சலுடன் கால் பதித்திருந்தார் என்பதை மகிந்தவின் இன்றைய கூற்று சான்று பகிர்கின்றது.

அது மட்டுமன்றி வடமாகாண முஸ்லிம்களின் அபிவிருத்திக்காக அதிக உதவிகளை ரிசாத் பதியுதீனுக்கு செய்தேன் என மகிந்த ராஜபக்ச குறிப்பிடுவதை பார்க்கும் போது வன்னி மவாட்ட மக்களை முன்னேற்றிய ஒரே ஒரு அரசியல் வாதி ரிசாத் மட்டும்தான் என்பது மறுபக்கம் நிரூபணமாகின்றது.

வன்னி மாவட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட அபிவிருத்திகளை ரிசாத் தடுத்து நிறுத்தினார் என ரிசாதால் உருவாக்கப்பட்ட முன்னாள் எம்பி சில்லறைத் தனமாக இறுதிப் பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய கருத்து மகிந்தவின் இந்தக் கூற்றின் மூலம் பொய்யாக்கப்பட்டு அவரை தலைகுனிய வைத்துள்ளது.

அதே நேரம் வன்னி மக்களின் அபிவிருத்திக்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் அதிகளவான அபவிருத்திப் பணிகளை இந்த நல்லாட்சி அரசு செய்யாது என்று வன்னி மாவட்ட மக்கள் மத்தியிலும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் எழுந்துள்ள ஐயப்பாட்டை நீக்க வேண்டிய பொறுப்பும் மகிந்தவின் இந்தக் கூற்றின் மூலம் மைத்திரி அரசுக்கு அழுத்தமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமுகத்தின் காவலன் நான் தான் என தான்தோன்றித் தனமாக கருத்து வெளிப்படுத்தி வரும் ஓர் இரு அரசியல் வாதிகளுக்கு மத்தியில் ரிசாத் பதியுதீன் தான் முஸ்லிம் சமுகத்தின் தலைவன் என மாற்று சமுகத்தை சார்ந்த இந்த நாட்டை ஆண்ட ஒரு தலைவனான மகிந்த ராஜபக்ச “சாகும் வரை மறக்க முடியாதவர்கள்” என ரிசாதை மறைமுகமாக குறிப்பிட்டு காட்டியிருப்பது ரிசாதின் உரிமைப் போராட்டத்திற்கு போதுமான சான்றாகும்.

முஸ்லிம் சமுகத்தை காப்பாற்றுவதற்காக துணிச்சலாக ரிசாத் பதியுதீன் எடுத்த உரிமைக்குரலும் அதன் மூலமாக மகிந்த அரசு கவிழ்க்கப்பட்டதன் பிரதிபலிப்பின் பாதிப்புமே மகிந்தவி;ன் இந்த காட்டமான கருத்தாக உள்ளது.

மகிந்தவுக்கு இந்தளவு தூரம் ரிசாத் பதியுதீன் தொடர்பிலான பதிவு அவரது நெஞ்சில் ஆணிஅறைந்தால் போல் பதிவாகியிருப்பதைப் போன்றுதான் தன் சமுகத்துக்காக ரிசாத் எடுத்த அத்தனை உரிமைக்குரலும் முஸ்லிம் சமுகத்தினர் நெஞ்சில் மகிந்தவை விட ஆழமாக பதிவாகியுள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட்டேதான் ஆக வேண்டும்.

20க்கும் நாங்கள் தான் குரல் கொடுத்தோம். ஆட்சி கவிழ்வதற்கும் நாங்கள் தான் பாடுபட்டோம் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எங்கள் பக்கமே என தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டு வீராப்பு பேசும் வெற்று அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் ரிசாத் தொடர்பான மகிந்தவின் கூற்று ரிசாத் தான் உண்மையான முஸ்லிம்களின் தலைவன் என்பதை இறுதியாக பறைசாற்றி நிற்கின்றது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *