Breaking
Fri. Apr 26th, 2024

யுத்தத்தினால் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது,   இனவாதத்தை தூண்டவேண்டாம் என மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தினவீரக்கோன் தெரிவித்துள்ளார். 

இன்று(26) மண்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் குணரத்தினவீரக்கோன், மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மண்னார் மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாக  கலந்துரையாடினார். இதன்போது, அமைச்சர் றிசாத் பதியுத்தீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹனைஸ் பாருக் மற்றும் மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய ஆகியோறும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 

வடமாகண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் அவலங்களை நேரடியாக அவதாணிக்கும் சர்ந்தப்பம் இன்றுதான் எனக்குகிடைத்தது. இம் மக்களது மீள்குடியேற்றம் தொடாபாக அமைச்சர் றிசாட் பதியுத்தீன்  பல தடவைகள் என்னிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்கின்ற அமைச்சர் றிசாட் பதியுத்தீனை சிலர் இனவாதியாகச் சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனிவரும் காலங்களில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் வடமாகாண முஸ்லீம்களின் அபிவிருத்தி அத்தனை நடவடிக்கைக்கும் எனது பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். அத்தோடுஅவர் மீது கூறப்படும் இனவாத கருத்துக்களை வன்மையாகக்  கண்டிக்கின்றேன்.  வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எவராக இருந்தாலும்   எனது அமைச்சு அதற்கான நடவடிக்கைகளில் பின்நிற்கப்போவதில்லை எனவும் அமைச்சர் குணரத்தினவீரக்கோன் மேலும் கூறியுள்ளார். 

இதன்போது அமைச்சர்கள்  மண்னார் உப்புக்குழத்தில் தற்காலிக கூடாராங்களில் வாழும் மக்களையும் நேரடியாகச் சென்றுபார்வையிட்டனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *