Breaking
Sat. Apr 27th, 2024

 

பெருநாள் நிகழ்ச்சிகளுக்காக இரு தினங்களுக்கு முன்னர் ஊரவர்கள் முறைப்படி போலீஸ் அனுமதி பெற்று ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த வேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் ரேஸ் நடத்தவிருந்த சுமார் 11 அரை ஏக்கர் அறுதிச் சீட்டுடன் கூடிய காணியில் நின்று கொண்டு அது தமக்குரிய இடம் என்றும் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி தர முடியாதென்றும் கூறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் பலத்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.

சர்ச்சை தொடர்ந்தபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் எம்மவரின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். சம்பவம் நடந்தபோது முந்தல் OIC மற்றும் போலீசார் ஸ்தலத்தில் இருந்துள்ளனர். ஆனால் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது முஸ்லிம்களை களைந்து செல்லும்படி கூறியுள்ளனர்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஊரவர்கள் உடனடியாக எமது அரசியல் தலைவர்களுக்கு விடயத்தை எடுத்துக் கூறியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ACMC புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், முந்தல் செயலாளர் பிரிவு ACMC அமைப்பாளர் ஆப்தீன் யஹ்யா, விருதோடை ACMC அமைப்பாளர் ஆர்ஷிக் மற்றும் கொத்தாந்தீவு அமைப்பாளர், இவர்களோடு மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உட்பட பெருந்திரளான அரசியல்வாதிகள் அங்கு விஜயம் செய்தனர்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் உத்தரவுக்கமைய DIG அடங்கலாக போலீசாரும் விஷேட அதிரடி படையினரும் அங்கு வந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தும்படி அமைச்சர் கூறியுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *