இளைஞர் மாநாட்டுக்காண ஆலோசனை கலந்துரையாடல்

எதிர்வரும் 24ம் திகதி வியாழக்கிழமை கிண்ணியா மண்ணில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் மாநாட்டுக்காண முன் ஆயத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) காலை 9.30 மணியளவில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் மாவட்ட இளைஞர்கள் பங்கு கொண்டதுடன் இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது
இதில் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள்,இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.