Breaking
Mon. Dec 15th, 2025

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற 21 , 22 ம் திகதிகளில் அகுரனை ஜாமிஆ ரஹ்மானியாவில் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தினால் ஷரீஆப்பிரிவின் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  தஸ்கர அல்ஹக்கானியாவின் இறுதியாண்டு மாணவர்களான மாவனெல்லையைச் சேர்ந்த எம்.எச் முஹம்மத் ஸாதிக், அகுரனையைச் சேர்ந்த எம்,ஏ அப்துல்லாஹ் ஆகியோர் முதலாம்மிடத்தைப் பெற்றுள்ளனர். சுமார் 69 அரபுக்கல்லூரிகளிள் 138 மாணவர்கள் கலந்து கொண்ட இப்பரீட்சையில் இருவரும் 120 புள்ளிகளில் 119 புள்ளிகள் வீதம் பெற்று முதன்மை மாணவர்களாக தெரிவு செய்யப்பட்டு கல்லூரிகள் மட்டத்தில் அல் ஹக்கானிய்யா முதலிடம் வகிக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இறுதிநாள் வரை இக்கல்லூரி வளர்ச்சியடைய அல்லாஹு தஆலா அருள் புரிவானாக!

Related Post