Breaking
Sat. Jul 27th, 2024
இந்தியாவின் புத்தகாயாவில் உள்ள பௌத்த மதத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது வேதனை தரும் ஒன்றாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மொரீஸியஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று பிற்பகல் நாடு திரும்பினார்.

மதங்கள் மனிதர்களை நேர்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றன.அகிம்சை,கருணை,விட்டுக் கொடுப்பு,புரிந்துணர்வு,ஒருவருக்கொருவர் பரஸ்பரம் என்பதை எடுத்துயியம்பிவரும் மதங்கள்,ஒரு போதும்,பிரிவினை வாதத்துக்கும்,இன முரண்பாடுகளுக்கும் வித்திடுமாறு கோறவில்லை என்பதை தெளிவாக சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,மதத் தளங்களை இலக்கு வைத்து தாக்குவது என்பது ஒரு  போதும் அங்கீகரிக்க முடியாது.

அது எங்கு நடந்தாலும் அதனை நாம் வண்யைமாக கண்டிக்க வேண்டும்.இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையில் காணப்படும் நல்லுறவை தக்க வைத்துக் கொண்டு எமது நாட்டின் பல் துறை அபிவிருத்திகளுக்கு உதவிகளை பெற வேண்டும்,ஆனால் அந்த உதவிகளை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்ற நோக்கத்தோடு சில பிரிவினைவாத அமைப்புக்கள் தொடராக இலங்கைக்கு எதிராக செயற்பட்டுவருகின்ற இந்த தருனத்தில் மிகவும் பொருமையாக எமது மக்கள் செயற்பட வேண்டும் என்றும் கேட்டுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,இந்த சம்பவத்தை தமது கட்சி வண்மையாக கண்டிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Post