இனங்காணப்பட்டால் அங்கொட வைத்தியசாலைக்கு

எபோலா உயிர் கொல்லி வைரஸ் இலங்கைக்குள் நுழையாதிருக்கும் வகையில் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன

ஏதாவது தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் உடனடியாக அங்கொட தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி. ஜி. மகிபால தெரிவித்துள்ளார்.

எபோலா வைரஸ் நமது நாட்டினுள் எந்த வகையிலும் நுழைய முடியாத வகையில் தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தில் வரும் பயணிகள் பூரண சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டினுள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த வாரத்தில் இப்பரிசோதனை வசதிகள் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

(Thinakaran)