Breaking
Mon. Mar 17th, 2025

ஊடகவியலாளர் காணாமல் போவதை தடுத்து நிறுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திய போதிலும் சில ஊடக நிறுவனங்கள் என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை கலை சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது சம்பந்தமாக ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது.

நாட்டை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆட்சி செய்தவர்கள், ஊடகவியலாளர்களுக்கு இடையூறுகளையும் தொந்தரவுகளையும் கொடுத்த குற்றச்சாட்டில் இருந்து விலக முடியாது.  அத்துடன் ஊடக நிறுவனங்களின் பணிப்புரியும் ஊடகவியலாளர்கள் அனுபவம், திறமை வெளியிடப்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

மேலும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் உயிர்களையும் தமது உடல் அங்கங்களையும் இழக்க நேரிட்டதாகவும் ஜனபதிபதி தெரிவித்துள்ளார்.

By

Related Post