(BBC)
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா தொற்றுநோயை எதிர்கொள்வதற்காக, பரீட்சார்த்த வைரஸ் எதிர்ப்பு மருந்தொன்றை வழங்கத் தயாராக உள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
T-705 அல்லது அவிகான் (Avigan) என்ற ஒருவகை சளிக்காய்ச்சல் மருந்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
எபோலாவுக்கு எதிராக இந்த மருந்து தொழிற்படுமா என்பதில் இன்னும் தெளிவில்லை.
ஆனால், குறித்த வைரஸ் தொற்றுகளுக்கு இடையே உள்ள ஒத்த இயல்புகள் காரணமாக, இந்த மருந்து பயனுள்ளதாக அமையும் என்றே அதனைத் தயாரிக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் பரீட்சார்த்த மருந்தொன்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த மருத்துவர்கள் மூவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக லைபீரியா தெரிவித்துள்ளது.
எபோலா சிகிச்சையில் பரீட்சார்த்த மருந்துகளை பயன்படுத்துவது, மருத்துவ நெறிமுறைகளின் படி சரியானது தான் என்று சர்வதேச நிபுணர்கள் குழுவொன்று ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.