Breaking
Tue. Nov 5th, 2024
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் 30-08-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பா.தாட்சாயினி (வயது 17) அவரது சகோதரியான பா.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த இ.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நிலவி வரும் வரட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையிலேயே குறித்த நால்வரும் குளத்தில் குளிக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Post