Breaking
Mon. Jan 20th, 2025

மஹிந்த சிந்தனை தூரநோக்கு திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கும் 13 ஆவது தேசிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் இன்று

(19) நடைபெற்றது.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் 5000 காணி உறுதிகள் இன்றைய நிகழ்வில் வழங்கப்பட்டன. அவர்களுள் ஒரு சிலருக்கு ஜனாதிபதி தமது கரங்களால் காணி உறுதிகளைக் கையளித்தார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்க, அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Post