நாட்டின் சகல மாவட்டங்களிலும் பெய்த கடும் மழை காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஹெலிகொப்டர் பயணம் பாதி வழியில் தடைப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெற்ற பிரஜைகள் குடிநீர் பயன்பாடு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஹெலிகொப்டர் மூலம் கண்டிக்கு பயணித்தார்.
எனினும், சீரற்ற காலநிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கொழும்பிற்கே ஹெலிகொப்டர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி பெயரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.