Breaking
Mon. Dec 15th, 2025

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு எதிராக பொதுபலசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு ஜுன் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மன்றில் ஆஜராகினர். எனினும் குறித்த வழக்கு விசாரணையினை ஜுன் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.

இன்றைய வழக்கு விசாரனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஜமாத்தின் தலைமை நிர்வாகமும், பொதுபலசேனா அமைப்பு சார்பில் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Post