Breaking
Mon. Mar 17th, 2025

சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த யுவதியான சமிளா 2007 ஆம் ஆண்டு, சிகிச்சைக்காக கொள்ளுப்பிட்டி வைத்தியசாலைக்கு சென்றவேளை சந்தேக நபரான வைத்தியர் யுவதிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.அதன் பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து யுவதியை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைதுசெய்யப்பட்டார்.அவருக்கு எதிரான வழக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Related Post