Breaking
Mon. Dec 15th, 2025
நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை, அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அனுமதியளிக்குமாறு கடுவெல நீதிமன்ற நீதவான், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பசில் மற்றும்  மூவர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் மே மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் பசிலை நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்குள்ள அனுமதியளிக்குமாறு சிறைச்சாலை வட்டாரங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பசில் ராஜபக்ச  உள்ளிட்ட மூவரும் நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post