Breaking
Sun. Oct 13th, 2024

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபாய் பெருமதியான நவீன வகை நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (20)   நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின்  நுழைவாயிலில் இடம் பெற்றது

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும்,  கப்பல் துறை, துறைமுகங்கள் பிரதியமைச்சருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் கலந்துகொண்டு குறித்த நுழைவாயிலுக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்,  நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் , நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி அன்சில்  மற்றும் அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள்,  பாடசாலை சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டார்கள்.