Breaking
Mon. Dec 15th, 2025

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர்.

அத்துடன் குறித்த விமானம் நேற்று இரவே நாடு திரும்புவதாக இருந்த நிலையில் இன்றும் நாட்டை வந்தடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விமானப் படைப் பேச்சாளரிடம் வினவியபோது, விமானத்தில் சிறு இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்ய தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்படி இன்று மாலை குறித்த விமானம் நாட்டை வந்தடையும் என விமானப்படை ஊடகப் பேச்சாளர் வின் கமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். (AD)

Related Post