Breaking
Wed. Sep 18th, 2024

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாய்க்கறியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அங்குள்ள நார்த் கிராஸ் மாநிலத்தின் ஓடரேக்கோ- உச்சென்யிம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம், நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தது. பக்கத்து வீட்டு கோழிகள் இடும் முட்டையை தினந்தோறும் உடைத்து குடிக்கும் பழக்கம் கொண்ட அந்த நாயின் தொல்லை தாங்க முடியாத கோழிகளின் உரிமையாளர் முட்டைகளில் விஷம் வைத்து அந்த நாயை கொல்ல முயன்றுள்ளார்.

விஷம் கலந்த முட்டைகளை சாப்பிட்ட நாயின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ’மண்ணுக்குள் போகும் கட்டை, மனுஷன் வயிற்றுக்குள் போகட்டுமே..’ என்று எண்ணிய உரிமையாளர் அந்த நாயை அறுத்து, விருந்தாக்கிக் கொண்டார்.

சமைத்த நாய்க்கறியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தின்றதுடன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் தாராள மனதுடன் பரிமாறியுள்ளார்.

நாயின் உடலில் ஏறியிருந்த விஷம் மாமிசத்திலும் கலந்திருந்ததால் அந்தக் கறியை சாப்பிட்ட நாயின் உரிமையாளர், அவரது 2 குழந்தைகள் மற்றும் அருகாமையில் வசிக்கும் மேலும் இருவர் என மொத்தம் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(MM)

Related Post