Breaking
Mon. Dec 15th, 2025

காத்தான்குடி, 5ஆம் குறிச்சி பகுதியில் இன்று மாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

5ஆம் குறிச்சி பகுதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் நடைபெற்ற வைபவமொன்றில் கடமையிலிருந்தபோதே  மேற்படி இராணுவ வீரர் துப்பாக்கிச் சூட்க்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில், கோவில்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றிய மதவாச்சியைச் சேர்ந்த 22 வயதுடைய டபிள்யூ.எம்.கருணாரத்ன என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சக இராணுவ வீரர்கள் இறங்கிச் சென்றதன் பின்னர்   இவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா அல்லது அவரது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். vk

Related Post