பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்களுக்கு ஏதாவது நினைவுச் சின்னமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐ.ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சமுத்திர பல்கலைக்கழக சட்ட மூலம் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தை பார்வையிடுவதற்காக மாகொல அநாதை இல்லத்தில் இருந்து 135 மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.
இது தொடர்பில் சபைக்கு தலைமை வகித்த குழுக்களின் பிரதித்தலைவர் சந்ரகுமார் முருகேசுவின் கவனத்திற்கு கொண்டு வந்த ஏ.எச்.எம். அஸ்வர் எம். பி. சபையை பார்வையிட மாகொல அநாதை இல்லத்திலிருந்து மாணவர்கள் வந்துள்ளனர்.
இவ்வாறு வரும் மாணவர்கள் வீடு செல்லும் போது ஏதும் நினைவுச் சின்னம் வழங்க வேண்டும். இது தொடர்பில் இதற்கு முன்னரும் நான் யோசனை முன்வைத்துள்ளேன் என்றார்.
பாராளுமன்றத்தை பார்வையிட வந்துள்ள மாணவர்களை வரவேற்பதாகத் தெரிவித்த குழுக்களின் பிரதித் தலைவர் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
(TK)