Breaking
Sat. Jul 27th, 2024

புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச் செல்வதற்காக ஆவன செய்து தருமாறு கேட்டதாக பொதுபல சேனா அமைப்பின் பணிப்பாளர் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம்கள் சிலர் பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்திற்கு வந்து, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைத் தாங்கள் சந்திக்க வந்தாகவும், அவருடன் கலந்தாலோசிக்க வந்ததாகவும், தான் ஞானசார்ரைப் பிரதிநிதித்துவப் படுத்தி அவர்களுடன் கலந்தாலோசித்தாகவும் திலன்த விதானகே குறிப்பிடுகின்றார்.

மக்காவுக்கு ஹஜ் கடமையைச் செய்வதற்காக செல்வதற்கு சில பா.உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களுக்குத் தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களின் தலையீட்டையிலிருந்து தங்களைக் கழற்றி தங்களுக்கு உதவி செய்யுமாறும் அவர்கள் கேட்டதாக திலன்த குறிப்பிட்டார்.

Related Post