மடு ஆலயத்தில் பறந்தது எமது விமானம் அல்ல ; தெரிவிக்கிறது விமானப் படை

 மன்னார் மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் போது நேற்று ஆலயத்தின் முற்பகுதியில் வானில் பறந்ததாக கூறப்படும் சிறியரக விமானம் இலங்கை விமானப் படைக்கு சொந்தமானது அல்ல என விமானப்படை  தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமானப்படைத் தரப்பிற்கு எவ்விதமான தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை விமானப்படை பேச்சாளர் அலுவலகத்தின் விங் கொமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்துள்ளார்.
மடு திருத்தல ஆவணித் திருவிழாவின் திருப்பலி நேற்று காலை ஒப்புக்கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த சிறிய ரக விமானம் வானில் பறந்ததாக தகவல்கள் வெளியாகின.
இரைச்சலுடன் வானில் பறந்துகொண்டிருந்த இந்த விமானத்தில் ஆட்கள் எவரும் இருக்கவில்லை எனவும் திருவிழா திருப்பலி நிறைவடைந்த பின்னர் விமானம் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.