Breaking
Sat. Jul 27th, 2024
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டம் நடத்திவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது,
நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு சட்ட விரோதமானது.இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப அரசு அதிகாரிகள், போலீசார் என, அனைவரும் உதவ வேண்டும். என் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சாகவும் நான் தயார். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, அரசை செயல்பட விட மாட்டோம்; போராட்டத்தை நானே முன் நின்று நடத்துவேன்.
நவாஸ் ஷெரீப், ‘பாசிச’ எண்ணம் கொண்டவர்; ஜனநாயகத்தில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. அமைதியாக போராட்டம் நடத்திய எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அவர் கொடுமையானவர். அவரும், அவர் தம்பி ஷாபாஸ் ஷெரீபும் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை; மேலும் தீவிரப்படுத்துவேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Related Post