Breaking
Sat. Jul 27th, 2024

மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட அகதி முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படி ஒரு சோதனை என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(12) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்.

1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு இன்று பொது பலசேனாவால் நெருக்கு வாதங்கள் ஏற்பட்டுள்ளது.

-இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. அழகான முறையில் கொண்டு செல்லும் அதிமேதகு ஜனாதிபதியின் பெயரை நாசப்படுத்தும் செயல்களையும், துரோக செயல்களையும் செய்கின்ற பேரினவாதிகளின் முற்போக்கு செயல்களையும் அடாவடி தனத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் குற்றவாளிகளாக எங்கே எப்போது இந்த நாட்டிற்கு எந்த விதத்தில் துரோகம் செய்தார்கள்? என்று கேட்க விரும்புகின்றேன்.

பொது பலசேனா என்றால் என்ன? இனவாதத்தை உண்டுபண்ணுபவர்களா? மாற்று மதங்களை அழிப்பவர்களா? இது வேண்டுமென்றால் உங்கள் நாடாக இருக்கட்டும்.

நாங்கள் நாட்டைக் கேட்கவில்லை, இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து வருபவர்கள் இருப்பதற்கு ஒரு இல்லிடத்திற்கான காணிகளை மாத்திரமே கேட்கின்றோம்.

நாங்கள் இனவாதிகள் இல்லை மதவாதிகள் இல்லை மதத்திலோ,மார்க்கத்திலோ எங்கள் முஸ்லிம் சமுதாயத்தினர் இறை அச்சத்துடன் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள்.

அன்பார்ந்த தேரர் அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன், மதங்களை பேணி நடக்க வேண்டும். பௌத்த மதத்தை பொறுத்தவரை எல்லா இனத்தவர்க்கும் ஒரு கௌரவத்தை உண்டு பண்ணக்கூடிய மதம்.

யாரிற்குமே வதை செய்வதையோ, மன உளைச்சலையோ கொடுக்காத ஒரு உன்னதமான மதம். அந்த உன்னதமான பௌத்த மதத்தை முழுதாக படித்த ஒரு கூட்டம் காட்டு மிராண்டித்தனமாக நடப்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு விடயம்.

அது மட்டுமின்றி நாங்கள் தனிநாடு கேட்கவில்லை சொந்தமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில் திரும்பவும் இருப்பதற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்றுக்கிடைத்த இடங்களிலேயே இருக்கின்றோம். நீங்கள் சொல்லுவதை முஸ்லீம்களோ,அல்லது தமிழ் பேசும் மக்களோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் யார் இந்த நாட்டில் எங்களைப் போல் ஒரு பிரஜா உரிமை பெற்ற ஒருவர்தான். உங்களிற்கு இருக்கிற அனைத்து உரிமையும் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களிற்கும் இருக்கிறது. என்பதை அதிமேதகு ஜனாதிபதி பலமுறை சொல்லியிருக்கிறார்.

இது உங்களது மரமண்டையில் விளவில்லையா? இனி இப்படியான தேவையற்ற விடயங்களில் ஈடுபடுகின்ற காட்டு மிராண்டிக்கூட்ட பொதுபலசேனா முஸ்லீம்களின் மத விடயங்களில் நீங்கள் தலையிட எந்த அருகதையும் கிடையாது.

இப்படியான செயல்களை முற்றாக நிறுத்த வேண்டும். மாற்று மதங்களில் தலையிடுவதற்கு பொதுபலசேனாவிற்கு அதிகாரம் கிடையாது.

இப்படியான காட்டுமிராண்டிக்கூட்டத்தை அடக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை. இறைவன் நிச்சயமாக உங்கள் செயல்களைப் பார்த்துக்கொண்டிருகக்கிறான். எங்களிடம் படைபலமோ, ஆயுதபலமோ இல்லை. ஆனால் இப்பிரச்சனையை நாங்கள் இறைவனிடமே பாரப்படுத்தியுள்ளோம்.

இதற்கான தண்டனையை இறைவனே அவர்களுக்கு அளிப்பார்.என வடமாகாணசபை உறுப்பினரும் பிரதம அகொறடாவுமாகிய றிப்கான் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post