Breaking
Sat. Jul 27th, 2024

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே  தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை  கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர்.

அதில்  காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில் தலையிடுவது அமெரிக்க மக்களின் உயிரை காக்க வேண்டும்.ஆனால் உங்கள் தலையீட்டுக்கு நான் ஏன் என் உயிரை பறிகொடுக்க வேண்டும்? நான் அமெரிக்க குடிமகன் இல்லையா? என்று கேட்டுள்ளார்.ஸ்டீவன் அருகில் நின்றிருந்த ஜான், அங்கிலத்தில் கூறியதாவது, நான் வந்துவிட்டேன் ஒபாமா.உங்களின் கொடூரமான வெளியுறவுக் கொள்கை, தொடர்ந்து தாக்குதல் நடத்துவது, எச்சரிக்கையையும் தாண்டி தாக்குவது ஆகியவற்றால் தான் நான் திரும்பி வந்தேன் என்று கூறிவிட்டு ஸ்டீவனின் தலையை துண்டித்துள்ளார்.இக்காணொளியை வெளியீட்டால் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Post