அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் முசலி பிரதேச சபைதயின் மாதாந்த அமர்வு நேற்று (2014-04-24) நடைபெற்றது. இவ் அமர்வின் போது சபையின் தவிசாளர் எகியா பாய் அவர்களினால் இந்த நாட்டில் இனங்களுக்கிடைய பிரச்சினையினை ஏற்படுத்தி வரும் பொது பல சேனாவின் நடவடிக்கையினை கண்டித்தும் மன்னார் மறைக்கார் தீவு மக்கள் காணி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு அவர்களின் காணியினை வழங்க வேண்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு சபையினால் ஏகமனதாக நிறைவேற்றபட்டன.
மேலும் தவிசாளர் தெரிவிக்கையில் கடந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்.மாகாண சபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலிம் இந்த மரைக்கார் தீவு மக்களும் முசலி பிரதேசத்தில் உள்ள அணைத்து முஸ்லிம் மக்களும் ஜக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்குதான் வாக்களித்தனர்.
பொது பல சேனாவின் நடவடிக்கையினை கட்டுபடுத்தவில்லை என்றால் மன்னார் மாவட்டத்தில் மட்டும் இன்றி இந்த நாட்டில் கட்சி பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டிவரலாம் இந்த முசலி பிரதேசத்திற்கு வந்து மறைக்கார் தீவு மக்களை வெளியேறுங்கள் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.
இந்த கண்டன தீர்மானத்தின் முல பிரதிகளை கௌரவ ஜனானபதிக்கும் .பாதுகாப்பு செயலாளருக்கும் மற்றும் வன்னி அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் றிசாட் பதீயுதின் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்து என தெரிவித்தார்.