Breaking
Sat. Jul 27th, 2024

நேற்று முன்தினம் (01) பாராளு மன்றத்தில் பௌத்த சாசன மத விவகார அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் மு.ப. 10.30 மணியளவில் பிரதி அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது. இக்கூட்டத்திற்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர், இந்து, கிறிஸ்தவ, பௌத்த முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் அத்துரலிய ரத்ன தேரருக்கும் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கிடையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கடும் வாக்கு வாதம் இடம் பெற்றது. இடையில் குறுக்கிட்ட அமைச்சர் தினேஷ் குனவர்தன இவ்வாக்கு வாதத்தை சுமுக நிலைக்கு கொண்டுவந்தார். இது தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத் தரணி ஹுனைஸ் பாரூக் கருத்து தெரிவிக்கையில்…

 அத்துரலிய ரத்ன தேரர் பௌத்த சாசன மதவிவகார அமைச்சின் செயலாளரிடம் வேண்டு கோள் ஒன்றை விடுத்தார். அதாவது பௌத்த சாசன அமைச்சின் சுற்று நிறுபத்திற்கு அமைய அனுமதி பெறப்படாத பள்ளி வாசல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் இந்த சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

அதற்கு ஹூனைஸ் எம்.பி ‘இன்று நாட்டில் எத்தனையோ அனாச்சாரங்கள் நிகழ்கின்றன மதஸ் தாபனங்களுக்கருகில் மது சாலைகள், உடரடி கள், சூதாட்ட அமைப்புகள் போன்றன அமைக்கப் பட்டு மத வழிபாடுகளுக்கு இடைஞ்சல்கள் செய்யப் படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும்’ என தேரருக்கு காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 இதற்கு கருத்து தெரிவித்த தேரர் நீங்கள் தான் வெளிநாடுகளுக்கு பிழையான தகவல்களை கொடுப்பவர்கள் பள்ளிகளைத் தாக்கியதாக இனவாதத்தைக் கக்கியுள்ளார்.
அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அப்படியென்றால் தம்புள்ளை பள்ளிவாசல்களைத் தாக்கியது, மகியங்கனை பள்ளிவாசலிற்குள் பன்றியிரைச்சியைப் வீசியெறிந்தது, கிரேன்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்கள் இவற்றையெல்லாம் செய்தது முஸ்லிம்களா? என்று வினவினேன். அதற்கு அவர் ஆம் முஸ்லிம்கள்தான் என்னிடம் ஆதாரம் உண்டு, முஸ்லிம்கள் அவர்களுக்குள்ளே உள்ளே கருத்து முரண்பாட்டால் பள்ளிகளை உடைத்திருக்கிரார்கள் இது தெடர்பில் 17பேர் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்னிடம் ஆதாரம் இருக்கின்றது என்றார்.

 அதற்கு நான் ஆதாரம் இருந்தால் சமர்பித்துவிட்டு கதையுங்கள், பெறுப்புவாய்ந்த மதகுரு, அதுமட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர். நீங்கள் பெறுப்பில்லாமல் இவ்வாறு கூறுவது தான் இந்த நாட்டில் அச்சத்தையும் மதங்களுக் கிடையில் பிரச்சினையும் ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாட்டுத் தளம் எந்த சமயத்திற்குச் சொந்தமானது என்றாலும் அதனை கௌரவப் படுத்துவதும், பாதுகாப்பதும் பெறுப்பு வாய்ந்தவர்களின் பொறுப்பு. ஆனால் இன்று சில இனவாத குழுக்கள் இதனை கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

 சட்டத்தை கையில் எடுத்து தான் விரும்பிய படி செயற்பட எவருக்கும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். அது எந்த தரப்பினராக இருந்தலும் சரி நாங்கள் பேசிப் பார்ப்போம், கதைக்க வேண்டிய இடத்தில் கதைப்போம், தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் தட்டிக் கேட்போம், நீதியை நாடி நீதி மன்றம் செல்வோம், முடியாவிட்டால் சர்வதேச உதவியைக் கூட நாட நான், எனது கட்சி தயாராக இருக்கிறது. மேலும் கிரேண்பாஸ் பள்ளி பிரச்சினை தொடர்பில் வீடியோ எம்மிடம் இருக்கின்றது. இதனை பொலீஸ்மா அதிபருக்கு அனுப்பியிருக்கின்றோம். அதைப் பார்த்தால் தெரியும் யார் பள்ளியைத் தாக்கியது என்று கூறினேன்.

 இதற்கு அவர் அது முறைப்படி கட்டிய பள்ளியல்ல என்றார். அதற்கு நான் பள்ளி முறைப்படி கட்டியதா இல்லையா என்பதைப் பார்க்கவும் அதற்கு நடவடிக்கை எடுக்கவும் நாட்டில் சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தை உங்களுக்கு அல்லது பள்ளியைத் தாக்கிய காடயர்களுக்கு யார் கையளித்தது. இதைத் தான் நான் சொல்கின்றேன் ஒரு சில இன வாதிகள் தங்களின் அரசியல் கதிரைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இப்படியான சிறுபான்மையினரின் மதஸ்தாபனங்களை தாக்குகின்றார்கள். அதனைத் தட்டிக் கேற்பவர்களை மீடியாக்களில் இனவாதிகள் என்று சொல்கின்றார்கள.; மீண்டும் நான் எச்சரிக்கின்றேன் இதற்குப் பிறகு சட்டத்தை தனது கையில் விரும்பியபடி எடுத்து ஆட்டம் போடுபவர்களை நிச்சயம் நாங்கள் சந்வதேசம் சென்றாவது அடக்குவோம்.

 இதற்கு அவர் முஸ்லிம்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிறுவனங்கள் பணம் அனுப்புகின்றன அவர்கள் தான் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றார்கள் என்றார். அதற்கு நான் நாங்களும் சிந்திக்கிறோம் இந்த இன வெறியாட்டத்தில் ஈடுபடுகின்ற மதஸ்தாபனங்களை (பள்ளிவாசல்களை) தாக்குபவர்களுக்கும் வெளிநாட்டுப் பணம் வருகின்றதோ தெரியவில்லை ஏனென்றால் உள்நாட்டில் இருக்கின்ற இனவாத அரசியல் கட்சிகளுக்கும் வெளிநாட்டில் சில நாடுகளுக்கும் மீண்டும் இலங்கையில் இன யுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இவர்கள் இலாபம் அடைய வேண்டிய தேவையுள்ளது.

 அதன் ஒருகட்டமாகத்தான் இதனைப் பார்க்கின்றேன் என்றதோடு சட்டங்களோ, சுற்று நிருபங்களோ இயற்றப்படுவது இலங்கையிலுள்ள அனைத்து மதங்களுக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். அது பௌத்த விகாரையாக இருக்கலாம், இந்து கோவிலாக இருக்கலாம், கிரிஸ்தவ பள்ளியாக இருக்கலாம் அல்லது முஸ்லிம் பள்ளியாக இருக்கலாம் என்று செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக் கொணடார். அதனை அவர் ஏற்றுக் கொண்டதோடு இவருக்குமிடையில் எறியப்பட்ட வாக்குவாதத்தினை அமைச்சர் தினேஸ் குனவர்தன, மதவிவகார பிரதியமைச்சர் ஆகியோர் தலையிட்டு சுமுக நிலைக்கு கொண்டு வந்ததோடு, சட்டத்தை விரும்பிய படி அனைவரும் கையில் எடுக்க முடியாயது என்ற கருத்தை இருந்த அத்தனை பேரும் ஏற்றுக் கொண்டனர்.

Related Post