Breaking
Sat. Dec 13th, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சிக்குள் கட்சியை திருத்தி அமைக்க முடியும். சிலர் இனவாதத்தை பரப்ப முயற்சித்து வருகின்றனர்.

ஜனாதிபதி பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு தனது கூடியளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post