Breaking
Wed. Dec 4th, 2024
முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார்.
இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார்.
இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ வைத்தியசாலையிலே இவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இவரது முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் தற்போது 15 வயதாகிறது.
சாஹிர் அப்துல் கரீம், பாத்திமா நிரோஷா தம்பதிக்கு தற்போது மொத்தமாக 7 ஆண் பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாத்திமா நிரோஷா  உலகிலேயே மூன்று பிரசவங்களின் போதும் அதிகமான எண்ணிக்கையில் சிசுக்களை பெற்றவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது, தாயும் சிசுக்களும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TM

Related Post