Breaking
Wed. Dec 4th, 2024

-இர்ஷாத் றஹ்மத்துல்லா-

காலம் கடந்த ஞானம் தொடர்பில் அவ்வப்போது பலரும் பேசுவார்கள்.ஒரு விடயத்தை செய்ய வேண்டிய காலத்தில் அதனை செய்யாது வேறு ஒரு சந்தர்ப்பத்தில் செய்கின்ற போது அதனைது பெறுமதியினைாக எடுத்துரைக்கும் போதே இந்த பழமொழியினை கேட்கலாம்.அது அப்படியும் பொருந்தும் இல்லாவிட்டால் இப்படியும் பொருந்தும்.எது எவ்வாறாக இருந்தாலும் இ்ன்றைய காலத்தில் இந்த வெளிப்பாடு ஒரு சாதகமான சூழலுக்கு வழியிட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.எடுத்ததற்கெல்லாம் விமர்சனங்களை செய்வதும்,குற்றம் சாட்டுவதும் இன்று பழகிப்போன வழக்கமாகும்.இவற்றுக்குள் மத்தியில் நல்லதை செய்கின்றவர்கள் அதனை தொடர்ந்து செய்ய இதுவும் வழியாகிவிட்டது.

 வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும்,அவர்களது உரிமை,பாதுகாப்பு,இறுப்புக்கள் தொடர்பில் பல்வேறு தரப்புக்களின் தாக்குதல்கள் இன்று வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் இருந்து வருகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்டு அநாதரவாக ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் நாட்டில் பலபாகாங்களில் வாழ்ந்துவந்த வரலாறு அதனை் பின்னர் அவர்களது அரசியல் தலைமைகள் எடுத்த நகர்வுகள்,அதற்கு இடப்பட்ட தடைகள் தொடர்ந்து கொண்டு செல்லும் செயற்பாடுகள் தொடர்பில் நாம் அறிந்து வருகின்ற ஒன்றாகும்.அதனை கடந்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும்,பிரதேச அரசியல் வாதிகளும் இம்மக்கள் தொடர்பில் வெளிப்படுத்தும் ஆக்க பூர்வமான அறிவிப்புக்கள் ,மேடைப் பேச்சுக்கள்,பத்திரிகை அறிக்கைகள் என்று பார்க்கின்ற  போது அல்ஹம்துலில்லாஹ் அவர்களது உணர்வுகளின் பெறுமானத்தை ஊகித்து அறிந்து கொள்ள முடிகின்றது.

 இவ்வாறான தராரதரங்களுக்கு மத்தியிலும் இம்மக்களின் மீள்குடியேற்றத்தின் மூலம் மட்டுமே அம்மக்களது தன்மானம் பாதுகாக்கப்படும் என்ற அடித்தளத்தைினை கொண்டு செயற்படுகின்ற தலைமைகளையும் நாம் கானுகின்றறோம்.இந்த மக்களது மீள்குடியேற்றம் உரிய முறையில் இடம் பெற வேண்டும் என்பதில் அரசுக்குள்ளும்,வெளியிலும்,அதே போன்று சர்வதேச நாடுகளிடத்திலும் கொண்டு செல்லும் பணியானது மிகவும் சுமை மிகுந்ததொன்றாகும்.இந்த சுமையின் வலிகளை வெறுமனே வார்த்தைகளால் மட்டும் கூறிவிட முடியாது.அதனை அனுபவித்து பார்த்தால் தான் யதார்த்தம் புரியும் என்பதும் உண்மை தான்.இம்மக்களது மீள்குடியேற்றம் என்று ஆரம்பித்தது  முதல் எதிரியாக நின்றவர்கள் வன்னி மாவட்டத்தை சேர்ந்த சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்.முஸ்லிம்கள் தொடர்பிலும்,முஸ்லிம் தலைமைகள் தொடர்பிலும் சில ஊடகங்களை வைத்து மேற்கொண்டு வந்த செயற்பாடுகள்,விமர்சனங்கள் என்பன என்னிலடங்காதவை என்றால் அது மிகையாகாது.

 படுகின்ற அனைத்து அவஸ்தைகளையும் அனுபவித்து இம்மக்கள் வடக்கில் தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் குடியேற்றப்பட்டார்கள்.அந்த குடியேற்றத்தினைக் கூட களைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை பட்டியலிடலாம்.இந்த முயற்சியின் பின்னால் பலர் இருக்கின்றனர்.அவர்களைப்பற்றி பேசுவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல.இந்த மீள்குடியேற்றத்தை செய்ய வேண்டியது அரசாங்கமும்,மீள்குடியேற்றத்திற்க பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரும் தான் என்பதை யாவரும் நன்கறிவார்கள்.

 இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் அவர்கள்,தமது பணியினை சரியாக செய்தார்.அது அவர் பொறுப்பாகும்.அன்றைய காலத்தில் தமிழ் மக்களை முதன்படுத்தி செயற்பட வேண்டிய தேவையிருந்தது.ஏனெனில் அம்மக்களின் குறுகிய கால இடம் பெயர்வு,ஆனால் வடக்கு முஸ்லிம்களை பொறுத்த வரையில் அது ஒரு நீண்ட இடம் பெயர்வு,இரண்டையும் ஒப்பீட்ளவில் பார்க்கின்ற போது குறுகிய கால இடம் பெயர்விற்குட்பட்டவர்களை மீள்குடியேற்றம் செய்வது இலகு என்பதையும் நியாயமான காரணங்களை வைத்து விளக்க முடியும்..அதே போல் அன்று முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் சர்வதேசத்தின் அளுத்தம் பழைய,புதிய அகதிகள் என்ற பிரிவினையினால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கிடப்பில் போடப்பட்டதையும் அவதானிக்க வேண்டியுள்ளது.

 அண்மையில் மன்னாருக்கு விஜயம் செய்த தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் மன்னார் கச்சேரியில் இடம் பெற்ற கூட்டத்தில் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாக காணக் கூடியதாக இருக்கின்றது என்று கூறியமை வடக்கு முஸ்லிம்களுக்கு கிடைத்த மற்றுமொரு சந்தர்ப்பமாகும்.இது வெறும் வாய்வார்த்தைகளால் மட்டும் இருக்குமா என்ற கேள்வியினையும் கேட்க வேண்டும்.இவ்வாறன வாக்குறுதிகள் இம்மக்களுக்கு உணர்வை ஒரு போதும் ஏற்படுத்தாத போதும்,இ.ன்றைய காலகட்டத்தில் இந்த வாக்குறுதியினை நாம் நிராகரித்தும் செயற்பட முடியாது.

 இந்த வாக்குறுதியினை அடைவதற்கு மக்கள் பிரதி நிதிகள் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம்,நாட்டில் இனவாதிகளின் அட்டகாசங்கள் ஒரு புறம்,வங்குரோதது அரசியல் வாதிகளின் சதிகளும்,கழுத்தறுப்புக்களும் மற்றொரு புரம்.இவற்றுக்கு மத்தியில் முஸ்லிம் தலைமைகள் இம்மக்களது துரித மீள்குடியேற்றம் தொடர்பில் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியது அவர்களது பொறுப்பாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.எது எவ்வாறாக இருந்தாலும் இம்மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் அதீத அக்கறை கொண்டு செயற்பட்டுவரும் முஸ்லிம் அரசியல் தலைமைகளும்,பிரதி நிதிகளும் இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பகும்.

Related Post