Breaking
Sun. Dec 14th, 2025

மொரகஹகந்த நீர் விநியோகத்திட்டத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக விஷேட  விசாரணைக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு அமைச்சர் வசந்த அலுவிஹாரே தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் அவர்! மொரகஹ வேலைத் திட்டத்தில் கடந்த அரசு காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம் பெற்றுள்ளது மட்டுமின்றி இதனால் பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

 எனவே,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்தாலோசித்து அவரின் ஆலோசனைக்கமைய பூரண விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். மொரகஹ திட்டத்தினால் காணிகளை இழந்தோருக்கான நட்டஈட்டுத் தொகைகளையும் பெற்றுக் கொடுத்திட நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மகாவலி அதிகார சபையினால் கடந்த காலங்களில் சட்ட விரோத காணி சுவீகரிப்புகள் பற்றியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் வசந்த அலுவிஹாரே மேலும் தெரிவித்தார்.

Related Post