Breaking
Sat. Jul 27th, 2024

அஸ்ரப் ஏ. சமத்

சம்மாந்துறை கலாபூஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய ‘வரலாற்றிலோர் ஏடு’ நூல் வெளியீடு  ஆகஸ்ட் 25 திங்கட் கிழமை பி.பகல் 04.00 மணிக்கு  வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச்  சங்கத்தில் நடைபெறவுள்ளது.

முஸ்லீம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் ஆய்வு உத்தியோகத்தர், மௌலவி ஏ.சி.எம். புகாரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான ‘வரலாற்றிலோர் ஏடு’ எனும் நிகழ்சியின் நூல் வெளியீடு  முன்னாள் முஸ்லீம் சமய கலாச்சார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெறும்.

பிரதம அதிதியாக நீதிஅமைச்சர் ரஹுப் ஹக்கீம், கௌரவ அதிதியாக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத், விசேட அதிதி கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முசம்மில், வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் யு.எல்.எம் ஜௌஹர் ஏ.எஸ்.ஏ கரீம் ஆகியோறும் கலந்து கொள்வார்கள்.

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொள்வார். மற்றும் மன்சுர் ஏ. காதர், ரவுப் செய்ன், தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா, பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு நூல் பற்றி உரையாற்றுவார்கள்.

Related Post