இந்தியாவில் விமான சேவையை சரிவர செய்யாத விமானங்களின் பட்டியலில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பயணிகளின் புகார் பட்டியலில் சேவை சரியில்லை என்கிற குற்றச்சாட்டில் ஏர் இந்தியா விமானம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சேவை சரியில்லை என்று அந்த விமான நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
விமானம் சரியான நேரத்துக்கு புறப்படவில்லை, முன் அறிவிப்பு எதுவும் இல்லை, விமானம் ரத்து என்பது அடிக்கடி நிகழும் நிலை என்று ஏர் இந்தியா விமானத்தின் மீது இந்த வருடம் இதுவரை 213 புகார்களும், ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் மீது 179 புகார்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.