விரைவில் 1000 புதிய கிராமஅலுவலர்கள்

0
425

நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் மேலும் 1000 கிராம அலுவலர்களை புதிதாக நியமிப்பதற்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.    நாடளாவிய ரீதியில் மேலும் சுமார் ஆயிரத்து 600 வெற்றிடங்கள் தற்போது நிலவுகின்றன. அவற்றை நிரப்பும் வகையில் 1000 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

     ஏற்கனவே நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நியமனம் பெற்றவர்களுக்கு அடுத்ததாக அதிக புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்களிலிருந்து நேர்முகப் பரீட்சை மூலம் மேலும் 1000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படும் எனவும் அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 4ஆயிரம் கிராம அலுவலர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here