Breaking
Thu. Dec 11th, 2025

இரத்தினபுரி நகரில் பொலிஸ் அதிகாரியால் கடுமையாகத் தாக்கப்பட்ட பெண் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.´பட்டி´ என்ற பெயரில் அழைக்கப்படும் குறித்த பெண் இரத்தினபுரி நகரில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் கடுமையாக தாக்கப்படும் காட்சி நபர் ஒருவரால் கையடக்கத் தொலைபேசியில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருந்தது.இதனையடுத்து பெண்ணை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டு.  அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜனுக்கு ஆதரவு தெரிவித்து இரத்தினபுரி நகர சாரதிகள் சங்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Post