Breaking
Thu. Dec 18th, 2025
இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் அவுஸ்திரேலிய கால்நடை நிறுவனத்தின் பணிப்பாளர் ஸ்கொட் பேரெட்வேட் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவுதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைதிட்டத்துக்கிணங்கவே அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000  பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
2012ஆம் ஆண்டில் உயர் ரக 2000 கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அவை விவசாயிகளிடையே சிறந்த பயனை தந்துள்ளன. எனவே தான் மீண்டும் அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 கறவை பசுக்கள் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.

Related Post