Breaking
Mon. Dec 15th, 2025
இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அகதிகளில் அதிகமானோர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கின்றனர். இவர்களால் மதப் பிரச்சினைகள் எழக்கூடிய வாய்ப்புள்ளதாக ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இவர்களைத் திருப்திப் படுத்துவதற்கும், சந்தோசப்படுத்துவதற்கும் இலங்கையின் அமைதியை இழக்க வேண்டியேற்படலாம்.
ஆகவே பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தக் கூடாது எனக் கோரி அனிலா இம்ரான் என்ற பாகிஸ்தான் பெண் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான தீர்ப்பை நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தடையில்லை என அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Post