Breaking
Fri. Dec 19th, 2025

உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி உலக உணவு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன்படி  “குடும்ப விவசாயம் : உலகுக்கு உணவளிப்போம், பூமியை காப்போம்’ என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாக அமைந்துள்ளது.

அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என்கிறது ஐ.நா சபை.

உலகில் 80 கோடிப் பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக மக்கள் தொகையில் 11 சதவீதம். அதிகபட்சமாக ஆப்ரிக்காவில் தான் 20 சதவீதம் பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பட்டினியால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 50 லட்சத்துக்கும் அதிகம். இந்த எண்ணிக்கையை பாதியாக குறைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டும் பட்டினி மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

Related Post