IS அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமெரிக்க உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 ஆயிரத்தில் இருந்து 37ஆயிரத்து 500 பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் ஐஎஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அதிகபட்ச நபர்கள் சமீபத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும் இணைந்துள்ளனர் என்றும் அமெரிக்க உளவுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐஎஸ் அமைப்புடனான வான்வழித் தாக்குதல் குறித்து உரை நிகழ்த்தியது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

