Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, 03வது முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில், புது வருட நிகழ்வுகள் நேற்று முன்தினம் (23)மல்கடுவாவ மாநகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், குருணாகல் மாநகர சபை உறுப்பினருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில், பிரதம அதிதியாக  வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும் குருணாகல் மாநகரசபை முதல்வர் துஷார சன்ஜீவ, மாநகர சபை, பிரதேச சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன், அஇமகா மல்கடுவாவ வட்டார அமைப்பாளர் துஷாரி தமயன்தியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

 

 

 

 

Related Post