Breaking
Sun. Dec 7th, 2025

எல்லைதாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 21பேர் நேற்று இரவு பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை  கடற்றொழில் நீரியல் வளதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாகை மாவட்ட பூம்புகார் பகுதியினைச் சேர்ட்ந்த இருந்து 70 அடி நீளமான படகில் நேற்று மீன்பிடிக்க வந்த 21 தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேலும் அனைவரையும் இன்று பிற்பகல் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாங்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடவில்லை எனவும் தாம் திசை மாறியே இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்தாக தெரிவித்தனர்.

இதேவேளை, மன்னார் கடற்பரப்பிலும் நேற்று இரவு 6 படகுகளில் வந்த 30 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post