கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை சிறை அதிகாரிகளே பொறுப்பாக இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் அநியாயங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளன.

