Breaking
Fri. Dec 19th, 2025

இராணுவ ஊடகப்பிரிவு

காங்கேசன்துறை வெளிச்சவீட்டினை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச திறந்து வைத்தார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் அழைப்பை ஏற்று இருநாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச வரலாற்று முக்கியம் வாய்ந்த காங்கேசன்துறை வெளிச்ச வீட்டினை நேற்று திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட செயலர் பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டதுடன் மேலும் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், கடந்த கால யுத்தத்தினால் குறித்த வெளிச்சவீடு சேதமுற்ற நிலையில் இருந்தது. எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதாலும் எதிர்கால சந்ததிக்கும் நாம் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் இராணுவத்தினரால் குறித்த வெளிச்சவீடு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதாகவும் குறித்த வெளிச்ச வீடானது இலங்கை தொல்பொருள் துறையினரின் மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்டது என்றும் இராணுவ ஊடகப்பிரிவு தங்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Kankesanthurai Light House new and old 2014_10_12 350

Related Post