Breaking
Sun. Dec 14th, 2025
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பௌத்த விகாரையில சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.
இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமா என மின்சார சபை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

Related Post