Breaking
Thu. Dec 11th, 2025

தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை விடவும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதனையே தமது கட்சி விரும்புகிறது.  தற்போதைய பாராளுமன்றம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை புதிதாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில முக்கியமான விடயங்களின்போது சில அரசியல் கட்சிகளின் இணக்கப்பாட்டை எட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளையும் அணி திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post