Breaking
Sat. Dec 13th, 2025

நிலவில் ஒரு மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற வெளியான காணொளிக்கு நாசா விளக்கமளித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் ஒரு மனிதனின் உருவமும்இ அதன் நிழலும் நிலவின் தரைப்பரப்பில் தெளிவாக தெரிந்தது போலவும் வெளியான காணொளியை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

முதலில் இதை அமெரிக்க சர்வதேச விண்வெளி மையமான நாசா வெளியிட்டதாக கூறப்பட்டாலும்இ அதை நாசா உறுதிப்படுத்தவில்லை.

தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள நாசா விஞ்ஞானிகள் கூறியதாவதுஇ இவ்வாறு நிலவில் தோன்றியது மண் துகள்கள் அல்லது நெகட்டிவில் இருந்த கீறல்களாக இருக்கும்.

சந்திரனுக்கு 1971 – 1972ம் ஆண்டு அனுப்பட்ட அப்போலோ 15 அல்லது 17 விண்கலத்தின் மூலம் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஏனெனில் அந்த காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போதுள்ள அளவுக்கு இல்லாமல் வளர்ச்சி பெறாத நிலையில் இருந்துள்ளது.

எனவே இது போன்ற தவறான பிம்பங்கள் படத்திற்கு ஏற்படுத்தப்பட்டிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Related Post