Breaking
Wed. Dec 10th, 2025
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் கருத்து வெளியிட்டுவருவதாக அரசாங்கத்தின் உயர் கதிரையில் இருக்கும் முக்கியஸ்தர்களிடம் பெரும்பான்மை அமைச்சர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாரம் இடம்பெற்றிருந்த பாராளுமன்ற அமர்வில் சமகால நிகழ்வுகள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மிகவும் ஆவேசமாக பேசியிருந்த நிலையில் பிரபாகரன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்த புலனாய்வு பிரிவுக்கு ஏன் இன்னும் இரு தேரரை பிடிக்க முடியவில்லை என ஜனாதிபதியிடமும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தவிர பொது இடங்களிலும் அவர் முஸ்லிம்களின் சமகால விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.

இது தொடர்பில் அரச உயர்மட்டத்துக்கு விசனம் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை அரசின் முக்கிய தலைவர்களுக்கும் இந்த விடயம் எத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் பிரதமர் ரனில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பியதும் அமைச்சர் ரிஷாத் அவரை சந்திக்க உள்ளதாக அவர் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
 

Related Post