Breaking
Mon. Dec 15th, 2025

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு பாப் பிரான்சிஸ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வரவுள்ளதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் புனித பாப்பரசர், ஜனவரி 14ஆம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு காலி முகத்திடலிலும், பிற்பகல் 02.00 மணிக்கு, மடுமாதா தேவாலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நீர்கொழும்பு வீதியின் ஊடாக புனித பாப்பரசர் பிரான்சிஸ், திறந்த வாகன பவனியாக கொழும்பை நோக்கி பயணிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post